நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 புதிய படத்தை சுந்தர் சி இயக்குவதாகவும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. .அருணாச்சலம் படத்திற்கு பிறகு சுந்தர். சி யும் ரஜினிகாந்த்தும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ,இன்று சுந்தர் சி தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் 173 படத்திலிருந்து தாம் விலகுவதாக - தன் நிலையை விளக்கி செய்தி வெளியிட்டுள்ளார்,.. இது ரஜினி ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்த இயக்குனர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது..