14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராவணனை அழித்து, தன் துணையாள் சீதை, தம்பி லட்சுமணனுடன் அயோத்திக்கு ராமன் திரும்பிய நாளை அந்நாட்டு மக்கள் வீடு தோறும் விளக்கேற்றி கொண்டாடியதையே தீபாவளி என்றும் இதிகாசமான ராமாயணக் கதை சொல்கிறது
.. இதனோடு, தீபாவளி கொண்டாடுவதற்கு நரகாசுரன் என்னும் அரக்கன் தன் கொடூரமான செயல்களால் மக்களை துன்புறுத்தி வந்ததாகவும் அவனை அழிக்க மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்து மனைவி சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனை அழித்ததாகவும் கதை.
நரகாசுரன் தான் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண்டாடி மகிழ வேண்டும் .அதை தான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்கள் கொண்டாடிய நாளே தீபாவளி என்றும் இந்நாள் இருளை போக்கி ஒளியை கொண்டு வரும் நல்ல நாளாக வெற்றியை கொண்டாடும் நாளாக பார்க்கப்படுகின்றது.
. இதேபோன்று இந்து மதத்தில் இருந்து கிடைத்த சமண மதம் மகாவீரர் முக்தி அடைந்த நாளாக கொண்டாடுகிறார்கள். சீக்கியர்களோ 1577-ல் பொற்கோயில் கட்டும் புனித நாளை தீபாவளி நாளாக கொண்டாடுகிறார்கள்..
தமிழர்கள் தீபாவளியை ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கொண்டாடுகின்ற ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.. தமிழர்களின் வரலாற்று ஆவணங்களாக கருதப்படும் சங்க இலக்கியங்களில் தீபாவளி பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை என்றாலும் பிற்காலத்தில் அதாவது சோழர்கள் காலம் வரை தீபாவளி கொண்டாடியதாக வரலாறுகள் இல்லை.. ஆனால், திருமலை நாயக்கர் காலத்தில், தீபாவளி கொண்டாடியதற்கான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
.தமிழகத்தில் தீபாவளி அதிகாலையில், எண்ணெய் குளியல் முடித்து ,புத்தாடை அணிந்து, இனிப்பு பலகாரங்களை உண்ட பின்னர் பட்டாசு வெடித்து தம் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம் தமிழர்களின் பாரம்பரிய திருவிழா என்று வரலாறு சொல்கின்றது..