Advertiment

சூரசம்காரம் -27ஆம் தேதி திங்கள் கிழமை அரசு உள்ளூர் விடுமுறை

by Admin

ஆன்மீகம்
 சூரசம்காரம் -27ஆம் தேதி திங்கள் கிழமை அரசு உள்ளூர் விடுமுறை

அறுபடை வீடுகளில் ஒன்றாக குரு ஸ்தலமாக போற்றப்படும் திருச்செந்தூர், முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும், திருச்செந்தூரில் சூரசம்கார நிகழ்வு மிக முக்கிய சமய விழாவாகும் .அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி ஆறு நாட்கள் கொண்டாடப்படும். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை சிறப்பாக நடத்திட வேண்டி அக்டோபர் 27ஆம் தேதி திங்கள் கிழமை அரசு உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுத்துள்ளார் .இதன்படி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கி களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகின்றது,

Share via