தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் 2,708 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்றும் 37 புதிய கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி .செழியன் இப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனமாக நிரப்பப்படும் என்றார். கடந்த 2007, 2009, 2011, 2015 பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.