நெல் கொள்முதல் விலை உயர்வு செப்.1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மு.க.ஸ்டாலின் உயர்த்தி நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் செப்.1 முதல் 31.8.2026 வரை விவசாயிகளிடமிருந்து நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545-க்கு கொள்முதல் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.