சமீபத்தில் இணையதளங்கள் சோசியல் மீடியா வழியாக நடிகர் சூர்யா கோவை மாவட்டத்தில் வேட்பாளராக களம் இறக்க உள்ளார் என்கிற செய்தி பரவி வந்தது. இதற்கு அவருடைய ரசிகர் மன்றம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
.அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை! கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்.