
தென்காசி மாவட்டம் தென்காசியில் உள்ள பி எஸ் எஸ் திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் முதல் காட்சியாக திரையிடப்பட்டது தென்காசி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஏராளமான ஒரு திரண்டு வந்து மேலும் காலங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர் மேலும் ரசிகர்களுக்கு பப்ஸ் கூல்டிரிங்ஸ் தனியாக பாக்சில் வைத்து வழங்கப்பட்டன. ரசிகர்கள் முன் வரிசையில் அமர்ந்து படம் பார்ப்பதற்காக முண்டியடித்து ஒருவர் மீது ஒருவர் ஏறி சென்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள கூலி திரைப்படத்தை காண,கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள திரையரங்கில் அவரது ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி,இனிப்பு வழங்கிய உற்சாக கொண்டாட்டம்-கூலி திரைப்பட போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு திரைப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் SBT சினிமாஸ், சண்முகா , லட்சுமி ஆகிய மூன்று திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகியுள்ளது. SBT சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் கோவிலில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தும் திரையரங்கம் முன்பு கூலித்தொழிலாளர்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.