
மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மணக்குள விநாயகர் மூலவர் மற்றும் உற்சவருக்கு பால்,தயிர் சந்தனம்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று விநாயகப் பெருமானை வழிபட்டு சென்றனர்.