
364 இடங்கள் உள்ள நிலையில் இணைய வழி மூலம் 2,049 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டன. பி.காம்., பி.காம்., (ஐ.பி.,) பி.காம்.,(பி.ஏ.,) பி.ஏ., பொருளாதாரம், பி.ஏ., ஆங்கில பாடப்பிரிவுகளில் தலா 60 இடம், கணினி அறிவியல் பிரிவிற்கு 40, பி.எஸ்.சி., வேதியியல் பிரிவுக்கு 24 இடம் என மொத்தம், 364 இடங்கள் உள்ள நிலையில் இணைய வழி மூலம் 2,049 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பி.காம்.. பாடப்பிரிவுக்கு மட்டும் 1,074 பேர், பி.காம்., (சர்வதேச வணிகம்) பாடப்பிரிவுக்கு 577 பேர், பொருளாதாரம் பிரிவுக்கு 579 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) ஹேமலதா தலைமையில் ‘சேர்க்கை குழு’ அமைக்கப்பட்டு ‘கவுன்சிலிங்’ நடந்து வருகிறது.