Advertiment

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

by Staff

கல்வி
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற விளங்கும் பொறியியல் கல்லூரியில் சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி கல்வி குழுமமும் ஒன்று. இந்த கல்வி குழுமம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 பள்ளிகளைச் சார்ந்த 776 மாணவ மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி 2025 நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நாளுக்கு நாள் மாறிவரும் மாற்றத்தை சந்தித்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனைகள் அதற்கேற்ற கல்வியை கற்பது திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட கருத்துக்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவ மாணவிகள் சார்பில் தயாரிக்கப்பட்ட பல்வேறு அறிவியல் பூர்வமான கருவிகளின் உடைய கண்காட்சிகளும் நடைபெற்றன. இந்த கண்காட்சியில் வெற்றி பெற்ற சாதனையாளர் மாணவர்களுக்கு ரூபாய் 62 ஆயிரம் கல்லூரி குழுமம் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இசக்கி வித்தியாசரமம் பள்ளியின் உடைய நிர்வாக இயக்குனர் டாக்டர் ராம்குமார், பள்ளி தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன் மற்றும் சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் ரோபோடிக்ஸ் , சீன் கோடிங் , சயின்ஸ் எக்ஸ்போ, சோசியல் அவர்னஸ் போஸ்டர் டிசைன், உள்ளிட்ட நான்கு தலைப்பின் கீழ் நடந்த போட்டிகளில் 13 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று பரிசுகளை தக்க வைத்தனர்.சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி சார்பில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Share via

More Stories