
இன்று ஆடிப்பெருக்கு.. ஆடி பதினெட்டாம் நாள்
பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கருதப்படும் நீர் வழிபாடு. உற்பத்தி சக்திகளில் நீர் முதன்மையாக இருப்பதின் காரணமாக, காவேரி கரையோர பகுதிகளில் வடகிழக்கு மாவட்டங்களில் இது வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.. கிட்டத்தட்ட ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு இது ஒரு பெரு வழக்காக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.. நன்கு மழை பொழிந்து காவிரியில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுவதன் மூலமாக விவசாயம் செழித்து தங்கள் வாழ்க்கையும் செழிக்கும் என்பதனால் காவேரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு நீர் சக்திக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. .ஆடியில் திருமணங்கள் உள்ளிட்ட சுப காரிய நிகழ்வுகள் விலக்கப்பட்டாலும் ஆடிப்பெருக்கு என்பது மிக சிறந்த ஒன்றாக குடும்பத்தினரோடு காவேரி ஆற்றங்கரையில் பெண்கள் அனைவரும் சேர்ந்து பூஜை செய்து கலப்பு சாதம் அதாவது தேங்காய் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல் என அரிசி வழியாக பல்வேறு சாதங்களை சமைத்து வெள்ளம்,அரிசி இனிப்பு உணவுகளான காப்பு அரிசி,கருப்பு மணி போன்ற படையல்கள் வைத்து வெள்ளம் -அரிசியில் வைத்து செய்யப்பட்ட மாவை உருட்டி மாவிலையில் வைத்துமஞ்சள் நூலோடு விளக்கேற்றிஅதை ஆற்றில் மிதக்க விடுகின்ற சடங்கும் காலம் காலமாக நடந்தேறி வருகிறது.. இந்நிகழ்வில் ,திருமணமான ஆண்களுக்கு புது ஆடைகள் வழங்கி மகிழ்வு செய்வதோடு மங்கள நாணில் புதிதாக ஒரு தங்க நாணயத்தை சேர்த்து தம் கணவனுடைய ஆயுள் பெருக வேண்டும் என்று பெண்கள் இந்தச் சடங்குகளோடு தங்கள் வாழ்க்கையும் செழிக்க வேண்டும் என்று நீர் சக்தியை வழிபாடு செய்கிறார்கள்.