
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீ சுந்தரரை தடுத்தாட்கொண்ட காட்சி வான வேடிக்கையுடன் நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு ஆடி சுவாதி நட்சத்திரமான இன்று அண்ணாமலையார் கோவிலில் ஸ்ரீ சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மலர் மாலை அலங்காரத்தில் வெள்ளி ரிஷபவனத்தில் எழுந்தருளி திட்டி வாயில் வழியாக வந்து ஸ்ரீ சுந்தரரை தடுத்தாட்கொண்ட காட்சி வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சுந்தரமூர்த்தி நாயனார் மனக்கோளத்தில் இருக்கும்போது சிவபெருமான் நீ எனக்கு அடிமை என்று தடுத்தாட்கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சியளிக்கிறார், அதன் நிகழ்வாக அண்ணாமலையார் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு இந்த உற்சவம் ஆண்டுதோறும் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது.