
12 தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தின் திங்கள் கிழமையில், பூரம் நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா ஆடிப்பூரம் எனப்படுகிறது. ஆடிப்பூரம் அன்று மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது நல்லது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த நாளாகவும் ஆடிப்பூரம் சிறப்பிக்கப்படுகிறது. இன்று (ஜூலை 28) அம்மன், ஆண்டாள், விநாயகர் ஆகியோரை வழிபடுவது கூடுதல் சிறப்பை தரும்.