
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் நயன்தாரா, நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கியது பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் 50 நொடிகள் வரை ஒளிபரப்பாகக்கூடிய டாடா ஸ்கை விளம்பரம் ஒன்றில் நயன்தாரா நடித்துள்ளார். இதற்காக ரூ.5 கோடி சம்பளமாக வாங்கிய நிலையில், ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் என்றே பார்க்கப்படுகிறது. தற்போது நயன்தாரா டாக்சிக், மூக்குத்தி அம்மன் -2, ராக்காயி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.