Advertiment

நடிகர் தனுஷ்மூத்த மகன் திரை உலகில் அறிமுகமாக அவருக்கான போட்டோ சூட் நடந்துள்ளது.

by Admin

சினிமா
 நடிகர் தனுஷ்மூத்த மகன் திரை உலகில் அறிமுகமாக அவருக்கான போட்டோ சூட் நடந்துள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் நடிகர் _நடிகைகளின் வாரிசுகள் திரை உலகில் நடிப்பது என்பது வழக்கமாக உள்ளது. புகழ், கோடிக்கணக்கான சம்பளம், செல்வாக்கு இவற்றை அனுபவித்திருக்கும் தாங்கள் தங்களுடைய பிள்ளைகளையும் இதே துறையில் சாதிக்க வைக்க வேண்டும் என்று திரைக்குள் அழைத்து வருகிறார்கள். இதில் சில நடிகர்கள் வீட்டுப் பிள்ளைகள், இயக்குனர்களின் பிள்ளைகள் சாதித்து இருக்கிறார்கள். டைரக்டர் எஸ். ஏ. சந்திரசேகரின்  மகன் நடிகர் விஜய் இன்று பிரபலமான உச்சபட்ச நட்சத்திரமாக உள்ளார். நடிகர் சிவகுமாரின் இரு மகன்களும் சூர்யா -கார்த்திக் உச்ச நடிகர்களாக உள்ளனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு அவருடைய மகன் ,நடிகைகள் ராதா உள்ளிட்டோரியின் வாரிசுகளும் உலகநாயகன் கமலஹாசனின் இரு மகள்களும் நடிகைகளாக ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரு மகள்களும் இயக்குனராகவும் வலம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. நடிகர் விக்ரமின் மகனும் நடிகராக இரண்டு படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. .. இயக்குனர் கஸ்தூரி ராஜா தன் மூத்த மகனை இயக்குனராகவும் இளைய மகனை நடிகராகவும் வைத்து வெற்றி கண்டார். .இந்நிலையில், நடிகர் தனுஷ் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.. அவருடைய மூத்த மகன் இப்பொழுது திரை உலகில் அறிமுகமாக ,அவருக்கான போட்டோ சூட் நடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

 

Share via