Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அண்ணா பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின

by Admin

கல்வி
அண்ணா பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

 இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேநேரம், சில முக்கிய தேர்வுகள் மட்டும் மாணவர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு நடத்தப்பட்டன. அப்படித்தான், அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.

2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகளை, https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். பல மாணவர்களும் ஒரே நேரத்தில், ரிசல்ட் பார்க்க முற்பட்டதால், இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. எனவே சிறிது நேரம் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவருமே தேர்ச்சி பெற்றிருப்பதால் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்று தேர்வுகள் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

 

Share via

More Stories