Advertiment

சி.பி.எஸ்.இ. எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்முக்கிய அறிவிப்பு.

by Staff

கல்வி
சி.பி.எஸ்.இ. எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்முக்கிய அறிவிப்பு.

சி.பி.எஸ்.இ. எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இனி இரண்டு முறை நடத்தப்படும் என அறிவித்திருந்தது. அதற்கான விரிவான தகுதி அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முதல் பொதுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். இந்த தேர்வு பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கி நடைபெறும்.

முதல் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால், இரண்டாவது பொதுத் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். அவர்கள் மூன்று பாடங்களை இரண்டாவது தேர்வில் எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

முதல் பொதுத் தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாமல் புறக்கணிக்கும் மாணவர்கள் 'அத்தியாவசிய ரிப்பீட்' மாணவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்கள் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுத் தேர்வை மட்டுமே எழுத முடியும்.

புதியதாக 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 'அத்தியாவசிய ரிப்பீட்' மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஆகியோர் முதல் பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

10ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு கூடுதல் பாடங்களை எழுதுவதற்கான வாய்ப்பு கிடையாது. மேலும், தனிப்பாடம் தேர்வு (Individual Subject Option) வசதியும் வழங்கப்படாது.


முதல் தேர்வு நடைபெறும் காலகட்டத்தில் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், விதிவிலக்காக இரண்டாவது பொதுத் தேர்வின்போது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
குளிர்கால பாதிப்புள்ள பகுதிகள்: குளிர்காலத்தால் பள்ளி செயல்பாடு பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், முதல் அல்லது இரண்டாவது பொதுத் தேர்வு என ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

சிறப்புத் தேவை உள்ள மாணவர்கள்: சிறப்புத் தேவை உள்ள மாணவர்களுக்கான தேவையான் ஏற்பாடுகள் முதல் மற்றும் இரண்டாவது பொதுத் தேர்வுகள் இரண்டிலும் வழங்கப்படும்.

முதல் பொதுத் தேர்வு பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கி நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கான உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இரண்டாவது பொதுத் தேர்வு மே மாதத்தில் நடத்தப்படும்.

இரண்டு தேர்வுகளுக்கும் முழு ஆண்டுக்கான பாடத்திட்டம் (Full Syllabus) அடங்கும். படிப்பு மற்றும் தேர்வுத் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது.முதல் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும்.
இரண்டாவது தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும்.

Share via

More Stories