Advertiment

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது.விஜய் ஆண்டனி.

by Staff

சினிமா
திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது.விஜய் ஆண்டனி.

மதுரை சின்ன செட்டிகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகும் ‘மார்கன்’ படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயக்குநர் உடனான நட்பின் அடிப்படையில் மார்கன் படத்தை தானே தயாரித்துள்ளதாகக் கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், “திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரேட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பழக்கம். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. சக்தி திருமகன் திரைப்படத்திற்கு பின்பு  அனைத்து நடிகர்களுக்கும் இசையமைக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் மற்ற நடிகர்களை வைத்து தயாரிக்க இருக்கிறேன்” என்றார். 

அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? “இல்லை. எனக்கு அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. அது தொடர்பான அறிவு எனக்கு இல்லை. 50 வயதாகிவிட்டது. இதற்கு பிறகு நான் அது குறித்து அறிந்து பின்னர் தான் வர முடியும். பிரபலம் என்ற ஒரே காரணத்தால் நான் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது” என்றார்.

நடிகர்கள் நாட்டை ஆளக்கூடாது என விதியல்ல. எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என ஆண்டுள்ளனர். தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம்2” என்று கூறியுள்ளார்

Share via