Advertiment

வரலாற்றில் இன்று 03 ஜூன் 2025-செவ்வாய்.

by Staff

௨ண்மை
வரலாற்றில் இன்று 03 ஜூன் 2025-செவ்வாய்.

713 : பைசண்டைன் பேரரசர் பிலிப்பிகஸ் குருடாக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார்.
இரண்டாம் அனஸ்டாசியோஸ் பேரரசராக முடிசூடினார்.

1326 : ரஷ்யாவுக்கும் நார்வேக்கும் இடையே எல்லையை வரையறுக்கும் நோவ்கோரோட் உடன்பாடு ஏற்பட்டது.

1539 : ஹெர்னண்டோ டெ சோட்டோ புளோரிடாவை  ஸ்பெயினுக்காக உரிமை கோரினார்.

1834 : இலங்கை, கொழும்பு நகரில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை வாங்க தமிழருக்கும் சோனகருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

1839 : சீனாவில் பிரிட்டன் வணிகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1.2 மில்லியன் கிலோகிராம் அபினியை  லின்சீஸ் அழித்தார்.
முதலாம் அபினிப் போர் ஆரம்பமானது.

1915 : கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு பிரிட்டிஷ் அரசு 
ஸர் பட்டத்தை வழங்கியது.

1916 : அமெரிக்காவின் காவற்படையில் மேலும் 
4,50,000 ஆண்களை சேவைக்கு அமர்த்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

1929 : விஞ்ஞானி சி.வி. ராமனுக்கு இங்கிலாந்தில் ஸர் பட்டம் வழங்கப்பட்டது.

1940 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் விமானப்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.

இரண்டாம் உலகப் போர் :- பிரான்ஸின் டன்கிர்க் நகரில் நடைபெற்ற போரில் ஜெர்மனிப் படைகள் வெற்றி பெற்றன.
நட்பு அணி முழுமையாகப் பின்வாங்கியது.

1941 : இரண்டாம் உலகப் போர் :- நாஜி ஜெர்மனிப் படைகள் 
கண்டனோஸ் என்ற கிரேக்க கிராமத்தை அடியோடு அழித்து 180 கிராமத்தவரை படுகொலை செய்தனர்.

1950 : பிரான்ஸின் ஹெர்சாக், லாச்சனல் ஆகியோர் 8,091 மீட்டர் உயரமான அன்னபூர்ணா -1 மலையின் உச்சியை அடைந்த முதலாவது மனிதர் என்ற சாதனையைப் படைத்தனர்.

1962 : ஏர் பிரான்ஸ் விமானம் பாரிஸில் விபத்துக்குள்ளானதில் 130 பேர் உயிரிழந்தனர்.

1969 : தெற்கு வியட்நாமில் மெல்பேர்ன் என்ற ஆஸ்திரேலியப் போர்க்கப்பல் எவான்ஸ் என்ற அமெரிக்கப் போர்க் கப்பலுடன் மோதி, அதை இரண்டாகப் பிளந்தது.

1973 : சோவியத் சூப்பர்சோனிக் விமானம் பிரான்ஸில் விபத்துக்குள்ளாகி விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

1979 : தெற்கு மெக்ஸிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கிணறு ஒன்றில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதில் 30,00,000 பீப்பாய் 
எண்ணெய் கடலில் கலந்தது.

1984 : ப்ளூ ஸ்டார் நடவடிக்கை :- அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோவிலினுள் இந்திய ராணுவத்தினர் புகுந்தனர். 
ஜூன் 6 வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 
5,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1989 : சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் 7 வாரங்களாக நடைபெற்று வந்த ஆர்ப்பாட்டங்களை கலைக்க அங்கு சீன ராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

1991 : ஜப்பானில் அன்ஸென் எரிமலை வெடித்ததில் 43 பேர் உயிரிழந்தனர். 
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் ஆவர்.

1992 : சுற்றுப்புறச் சூழல் வளர்ச்சி மாநாடு பிரேஸிலில் துவங்கியது.
150 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

1993 : தர்மபுரி, சாமல்பட்டியில் தடம் மாறிப் போன சரக்கு ரயில் மீது கொச்சி எக்ஸ்பிரஸ் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர்.

1998 : ஜெர்மனியில் விரைவு ரயில் ஒன்று தடம் புரண்ட விபத்தில் 101 பேர் உயிரிழந்தனர்.

2006 : 2001-ல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு.கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.

2007 : தெற்கு சீனாவின் யுனான் பகுதியில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்து பலத்த சேதம் ஏற்பட்டது.

விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2012 : நைஜீரியா, லாகோஸ் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 153 பேரும் தரையில் 10 பேரும் உயிரிழந்தனர்.

2013 : வடக்கு சீனாவில் சிலின் மாகாணத்தில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.

2015 : கானா, அக்ரா நகரில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 200 பேர் உயிரிழந்தனர்.

2017 : லண்டன் பாலத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
பலர் காயமடைந்தனர்.
3 தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2019 : சூடானில் கார்ட்டூம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அரசுப் படைகள் சுட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

Share via

More Stories