Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சேஸிங் விமர்சனம்

by Editor

சினி ஆல்பம்
சேஸிங் விமர்சனம்

உயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக  பெண்  கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் கும்பலைப் பற்றி உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, அவர்களை கைது செய்யும் பொறுப்பை வரலட்சுமி ஏற்கிறார். 


தனக்கென நம்பிக்கையான போலீஸ் டீம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு, அதற்கான வேட்டையை தொடங்குகிறார். இளம் பெண்களை போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யும் வில்லன். போதை மருந்து கடத்தி விற்கும் கூட்டம் என ஒவ்வொன்றையும் அழிக்கும் வேலையில் இறங்குகிறார் வரலட்சுமி. 


இந்நிலையில் வரலட்சுமியின் டீமை கடத்துகிறது போதை மருந்து கூட்டம். அவர்களை வரலட்சுமி காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.


நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஏராளமான ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும் துணிச்சலாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு இணையாக படம் முழுவதும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சூப்பர் சுப்பராயன், மலேசிய வில்லன் ஜெரால்டு, சோனா உள்பட படம் முழுக்க ஏராளமான வில்லன்கள் வந்து போகின்றனர். பால சரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார்கள். 


இயக்குனர் வீரக்குமார், புதுமுக இயக்குனரான இவர், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்களை திறம்பட கையாண்டுள்ளார். படத்திற்கு சேஸிங் என பெயர் வைத்ததாலேயோ என்னவோ, ஏராளமான சேஸிங் காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார். சில இடங்களில் அது பின்னடைவாக அமைந்துள்ளது. திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் சேஸிங் விறுவிறுப்பாகி இருக்கும்.


படத்தின் 2ம் பாகம் முழுவதும் மலேசியாவில் படமாக்கி உள்ளனர். ஈ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு மலேசியாவின் எழிலை அள்ளி வந்திருக்கிறது. தஷியின் பின்னணி இசை காட்சிகளை வேகப்படுத்தி இருப்பதுடன் படத்திற்கும் பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘சேஸிங்’ விறுவிறுப்பில்லை

Share via