Advertiment

நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

by Admin

கல்வி
 நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

அண்மையில் தமிழக அரசு 2025 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி குன்னூர்,, திண்டுக்கல் நத்தம்,,,,, சென்னை ஆலந்தூர், விழுப்புரம் விக்கிரவாண்டி ,செங்கல்பட்டு செய்யூர் ,சிவகங்கை மானாமதுரை, திருவாரூர் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் திருவிடைமருதூர், பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆகிய 11 இடங்களில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்,. இதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதே கல்வி ஆண்டில் மேலும் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்குவதற்கான ஆணையை பிறப்புத்துள்ளார் .அதன்படி வேலூர் கே வி குப்பம். திருச்சி துறையூர். கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் 1320 மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் இக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது..

 

Share via

More Stories