
பிரபல குணச்சித்திர நடிகர் ராஜேஷ் காலமானார். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் ராஜேஷ் பள்ளி ஆசிரியராக இருந்து திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர். 1974 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை படத்தின் சிறிய வேடத்தில் நடித்ததோடு கன்னிப்பருவத்திலே படத்தில் கதாநாயகனாக நடித்து அச்சமில்லை அச்சமில்லை என்கிற படத்தின் மூலமாகவும் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். இந்த ஏழு நாட்கள் என்கிற படம் இவரை குறிப்பிடத்தக்க ஒருவராக மாற்றியது கமலஹாசன் உடன் இணைந்து சத்திய மகாநதி விருமாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர் கடன் தொல்லையின் காரணமாக தன் வீட்டை விட்டு பின்பு ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக தன் வாழ்க்கை வசதிகளை பலப்படுத்திக் கொண்டார். திரைப்படத்தில் நடித்ததோடு தொலைக்காட்சி தொடரிலும் நடித்தவர். அரசு திரைப்படக் கல்லூரியின் தலைவராகவும் இருந்துள்ளார். கலை மாமணி பட்டம் பெற்றவர். தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை 1984 1985 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் பெற்றவர். தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். இவருடைய அத்தை மகன்தான் இயக்குனர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
1949 டிசம்பர் 20ஆம் தேதி பிறந்த இவருக்கு தற்பொழுது 75 வயது ஆகிறது.