Advertiment

கர்நாடாக முழுவதும் கமலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

by Admin

சினிமா
கர்நாடாக முழுவதும் கமலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

கமலஹாசன் ,சிலம்பரசன் இணைந்து நடிக்கும் தக்லைப் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவராஜ் ராஜ்குமார் முன்னிலையில், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்கிற ஒரு செய்தியை கோடிட்டு காட்டினார். அதற்கு சிவராஜ் ராஜ்குமார் சிரித்துக்கொண்டே தலையாட்டி இருப்பார். இப்பொழுது இதுதான் கன்னடம் முழுவதும் கமலுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக கிளம்பி இருக்கிறது. பட புரமோஷன் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இந்த கருத்து மேலும் படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

Share via