Advertiment

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம்

by Admin

கல்வி
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பள்ளிகள் வாயிலாகவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20ம் கல்வியாண்டின் 9-ம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் 38 பள்ளிகளில், தற்காலிக மதிப்பெண் பதிவிறக்கம் செய்யப்பட்டு சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
 
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., உள்ளிட்ட மேல்படிப்புகளில் சேர 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அவசியம். இதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளின் இணையதள முகவரி வாயிலாகவே பதிவிறக்கம் செய்ய முடியும்.

உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் அதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன் வாயிலாக மாணவரின் வரிசை எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே உள்ள ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share via

More Stories