Advertiment

அமெரிக்க அதிபர் ட்ரம் நடத்தும் வணிகப் போரில் இப்பொழுது திரைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

by Admin

சினிமா
அமெரிக்க அதிபர் ட்ரம் நடத்தும் வணிகப் போரில் இப்பொழுது திரைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம் நடத்தும் வணிகப் போரில் இப்பொழுது திரைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.. அமெரிக்காவிற்கு வெளியே இருந்து எடுக்கப்படுகின்ற படங்கள் அமெரிக்காவில் திரையிடப்பட்டால் அதற்கு 100% வரியை விதிக்கப் போவதாக ட்ரம் அறிவித்ததோடு அதற்கான வேலைகளை செய்யுமாறு வர்த்தகத் துறைக்கு ஆணையிட்டு உள்ளார். அமெரிக்கா சினிமா மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டெடுக்க வேண்டும் என்கிற நிலையில் இந்த அறிவிப்பை அவர் செய்துள்ளார். இதன் மூலம் இந்திய திரைப்படங்களில் குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கும் பாதிப்பு உருவாக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. கொரோனாவிற்கு முந்திய நிலையில் திரைப்படத் துறை அதிகமாக வளர்ச்சி கண்டிருந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு 5 பில்லியன் வருமானத்தை பெறக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணமாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது..

Share via