
தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடியவை காமதேனு, கற்பகத் தரு ,அட்சய பாத்திரம் என்று புராண- இதிகாச கதைகளில் சொல்லப்படுவது உண்டு. தற்பொழுது அள்ள அள்ள -குறையாத அட்சய திதியில் தங்க -வெள்ளி நகைகளை வாங்கி சேமிப்பதன் மூலமாக அவரவர் வீடுகளில் அள்ள அள்ள குறையாத தங்கமும் வைரமும் நிறைந்திருக்கும் என்ற கருத்து நின்று நிலை பெற்று ள்ளது.
இந்துக்களும் சைன மதத்தை பின்பற்றுபவர்களும் இந்த அட்சய திதியை முதன்மையான ஒரு மங்களகரமான நாளாக கருதுகிறார்கள்.
பிரம்மா இதே நாளில் தான் உலகத்தை படைத்தார் என்றும் சொல்லப்படுகின்றதுதிருமால் அவதாரங்களில் ஒன்றான பரசுராம அவதாரம், பகிரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாளாகவும் இது சொல்லப்படுகின்றது.
.சைன மதத்தை தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரர் ரிஷபா தேவரை போற்றும் விதமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.
. இந்த ஏப்ரல் மாதத்தின் ஒரு சிறப்பு வளர்பிறையில்அட்சய திருதியை வருவதுதான். எந்த ஒரு காரியத்தையும் இந்துக்கள் பெரும்பாலும் வளர்பிறை நாளிலே தொடங்குவதால் இந்த அட்சய திதி நாளில் பொன் பொருள் சேர்த்தால் அது தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்..ஆகவே, இந்த நல்ல நாளில் நகைகள், வீடுகள், மனைகள், இல்லத்திற்கு தேவையான புதிய பொருள்களை வாங்குவதின் மூலம் எப்பொழுதும் எல்லா செல்வமும் சேர்ந்து கொண்டிருக்கும் என்கிற நம்பிக்கை அடிப்படையாக மக்கள் இந்த அட்சய திருதியை வெகு விமர்சையாக கொண்டாடிவருகிறாா்கள் புதன்கிழமை ஏப்ரல், 30, 2025 அன்று அட்சய திருதியை.....