
பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர், பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழக நிதி உதவி பெற்று முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யக் கூடியவர்களுக்கு நடத்தக்கூடிய நெட் தேர்வு வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள்https//ugcnet.nta.ac.in என்கிற இணையதளத்தின் வழியாக விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க மே ஏழாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வு ஆண்டிற்கு ஜூன் ,டிசம்பர் ஆகிய இருமுறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.