
தமிழ் திரை உலகில் அன்னைக்கிளி படத்திலிருந்து இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா தான் இசையமைத்து உள்ள தனது பாடல்களை இப்பொழுது வருகிற புதிய படங்களில் ரீமிக்ஸ் செய்து மறு பாடல் உருவாக்கும் செய்து வருகிறாா்கள்.. தற்பொழுது வெளியான பல படங்களில் இது போன்ற பாடல்கள் இடம் பெற்றிருப்பதன் காரணமாக அந்த படக் குழுவிற்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது குறித்து அண்மையில் வெளிவந்த அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் மூன்று பாடல்கள் இது போன்று அனுமதி பெறாமல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருப்பதாகவும் ,அதற்காக மன்னிப்பு கேட்பதோடு 5 கோடி ரூபாய் நஷ்டம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. இதற்கு குட் பேட் அட்லி பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி பிலிம்ஸ் தாங்கள் சம்பந்தப்பட்ட படத்தினுடைய இசை உரிமை வைத்திருக்கிறவா்களிடம் முறையாக அனுமதி வாங்கியே பயன்படுத்தி இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.