
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் அட்டப்பாடி மலைத்தொடரில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஜெயிலர் 2 படத்தில் நடிப்பை உறுதி செய்துள்ளார். மேலும், எனது பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், சிறு கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.