Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஏப்ரல்14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

by Admin

ஆன்மீகம்
ஏப்ரல்14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

 தமிழர் பண்டிகைகளில் அறுவடை திருநாளை: அடுத்து கொண்டாடப்படும் பண்டிகை சித்திரை மாத தொடக்க நாளாகிய ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆவணி மாதமே தமிழர் பண்டிகை கொண்டாடியதாக தமிழ் நூல்களில் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.. இருப்பினும் ,தை மாதத்தில் விளைந்த நெல், கரும்பு ,இஞ்சி, காய்கறிகள், பயறு வகைகளை வைத்து சூரியனுக்கும் உற்பத்திக்கு காரணமான மாடுகளுக்கும் படையல் இட்டு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படு.ம் .அடுத்து முக்கனிகளில் மாவும் பலாவும் விளையும் காலம் சித்திரை மாதம். இந்த மாதம் அதிகமான வெப்பத்தின் தொடக்க காலமாக இருப்பதினால், மக்கள்  நீரில் வேப்பிலை கலந்து அந்த நீரை வழிபாட்டின் வழியாக பருகுவர். இது இயற்கையாகவே நோயை அதாவது வெப்ப நோயை கட்டுக்குள் கொண்டு வரும் என்பதின் காரணமாகவே இது பயன்படுத்திருக்கலாம். மா, பலா போன்ற படங்கள் உண்ணுவதன் மூலம் வெப்ப காலத்தில் ,மேலும் உடல் உஷ்ணத்திற்கு ஆளாக்கப்படலாம் என்பதனால் அந்த காலகட்டத்தில் மருத்துவ குணம் உடைய வேப்பிலை வழிபாட்டில் வைத்து  சாற்றினை பருகுவது மரபாக பின்பற்றப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வழிவழியாக வந்த பண்பாட்டு மரபின் வெளிப்பாடான இந்த பண்டிகையை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கின்றனர். சித்திரையில் இருந்து மூன்று மாதம் கழித்து அடுத்த பயிரிடலுக்கான காலம் தொடங்குகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..

Share via