
தமிழ் திரைப்பட பைனான்சியராகவும் விநியோகஸ்தராகவும் திரைஉலகில் பயணத்தை தொடங்கிய ஜி சேகர் யார் என்ற திரைப்படத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து ஊரை தெரிஞ்சுகிட்டேன் ,காவல் பூனைகள், உளவாளி என மூன்று படங்களை இயக்கியதோடு ஜமீன் கோட்டை என்ற படத்தில் நடிகராகவும் அறிமுகம் ஆனார். பல்வேறு வெற்றி படங்களை விநியோகம் செய்ததன் மூலமாக விநியோகஸ்தர்களுடைய சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்,. 73 வயதான இவர் சிறுநீரகப் பிரச்சனை காரணமாக அதற்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு தம் ராயப்பேட்டை இல்லத்தில் ஓய்வு பெற்றிருந்த நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக அவர் காலமானார்.