
இன்று வளர்பிறை பிரதோஷம். சிவன் வழிபாட்டில் முக்கியமான ஒரு வழிபாட்டுக்குரிய நாளாக பிரதோஷம் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் சிவனோடு சேர்ந்து அவர் வாகனமாக கருதக்கூடிய நந்தியையும் வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. பிரதோஷத்திரத்தில் சிவனை வழிபட்டால் கர்ம வினைகள் அகன்று நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்தப் பிரதோஷம் இரண்டு நிலைகளில் மாதத்தில் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. வளர்பிறை தேய்பிறையில் 13 வது நாளாக இந்த சிவ வழிபாட்டு முறை நிகழ்த்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் பத்தாம் தேதி வியாழக்கிழமையும் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பிரதோஷ வழிபாடு செய்யப்படுகின்றது.