
விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்ததாகவும் முக்கியமான சண்டைக் காட்சி விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.