Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

வெள்ளிக்கிழமை அன்று முழு நிலா நாளில் பங்குனி உத்திரம் தொடங்குகிறது

by Admin

ஆன்மீகம்
 வெள்ளிக்கிழமை அன்று முழு நிலா நாளில் பங்குனி உத்திரம் தொடங்குகிறது

இந்து சமய வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றிருப்பது பங்குனி உத்திரம்.  ஒவ்வொருவரும் தம் குலதெய்வ கோவிலில் வருடம் ஒரு முறை சென்று தம் நேர்த்தி கடனை- தம் வழிபாட்டை செய்வது . இது. காலம் காலமாக நடந்து வரும் ஐதீகம்.

பங்குனி உத்திரம் ஐயப்பனின் பிறந்தநாளும்கூட.

இது முருகனின் சிறப்பிற்குரிய நாளாக கொண்டாடப்படுகிறது.   பங்குனி உத்திரம் ஒரு மங்களகரமான நல்ல நாள். தமிழ் மாதங்களில் பங்குனி  12 -வது மாதமாகும்.. பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரமாகும். .அதனால், இந் நாட்களில் ,தம் குலதெய்வ கோயில்களில் குழந்தைகளுக்கு முடி இறக்குவது,  திருமணம் செய்து வைப்பது சிறப்பிற்குரியதாக கருதப்படுகிறது.. அந்த நாட்களில் தங்கள் குலதெய்வத்தை வேண்டி வழி வழியாக தங்களுடைய சந்ததிகளும் அவர்கள் வாழ்வும் சிறப்படைய வேண்டும் என்று மேற் கொள்ளப்படும் சிறப்பு வழிபாடு ,பங்குனி உத்திரம்..

ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முழு நிலா நாளில் பங்குனி உத்திரம் தொடங்குகிறது.

புராணக் கதைப்படி சிவனும் பார்வதியும் மணம் செய்துகொண்ட நாளும் இதே பங்குனி உத்திர நாள்தான்.. தவம் மேற்கொண்ட சிவனுடைய தவ நிலையை கலைத்த மன்மதனை எரித்த பொழுது தேவர்களெல்லாம் கலங்கி நின்றனார்களாம் ..அப்பொழுது அவர்களை ஆறுதல் படுத்தும் முகமாக சிவன்- சோமசுந்தரராக தாய் பாா்வதி தேவி  மீனாட்சி ஆகவும் நாமம் பெற்று அவர்களுக்குள் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

பங்குனி உத்திரத்தில் தான் ஸ்ரீ ராம பெருமாள் சீதையை மணந்தார் என்றும் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்தார் என்றும் அரங்கர் ஆண்டாளை கை கொண்ட நாளும் இந்த பங்குனி உத்திரம் தான்.என்றும்புராணங்கள் சொல்கின்றன.

: முருகன் பங்குனி உத்திர நாளில் தான் தேவர்களை வாட்டி வகுத்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தம்பியாகிய தாரகாசுரனை வீழ்த்தி அழித்ததார் என்பதுஅறியத்தக்கது..

Share via