
பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமாக கொண்ட ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் இந்துக்களின் பண்டிகை இது.. இப் பிறந்த நாள் பண்டிகை சித்திரை மாதம் வளர்பிறையில் ஒன்பதாம் நாள் வருகின்ற நவமியில் கொண்டாடப்படுகின்றது.. இந்த நாளின் ராமன் பிறந்தது முதல் அவர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து சீதையோடு அயோத்தியை ஆண்டது வரைக்கும் ஆன கதையைக் கொண்ட ராமாயண க் கதையில் உள்ள இதிகாச விஷயங்களை கீர்த்தனைகளாக பஜனை பாடி பக்தர்கள் தங்கள் இல்லங்களில் குழந்தை ராமர் சிலையை வைத்து பூஜித்து கொண்டாடி மகிழ்வர்.. பெருமாளின் ஏழாவது அவதாரம் இது.. ராமர் பிறந்த ஊரான உத்தரப்பிரதேச அயோத்தியில் இவ்விழா கோலகலாமாக கொண்டாடப்படும்... ராமசாமி என்று அழைக்கப்படுகிற ராமேஸ்வரர் கோயில்களிலும் தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் பீகாரில் உள்ள சீதா மர்ஹி போன்ற புகழ்பெற்ற ராம ஆலயங்களில் ராமர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வழிபாட்டோடு நிகழ்த்தப் பெறும்..