
சிவாஜி கணேசன் அன்னை இல்ல வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு நடந்து வந்தது.. இதில் பிரபு தரப்பில் எதிர் தரப்பு வழக்கு தொடரப்பட்டு நடந்து வந்தது.. உச்ச நீதிமன்றம் 3 கோடியே 74 லட்சம் கடனுக்கு வட்டியோடு சேர்த்து மொத்தமாக ஒன்பது கோடி 35 லட்சம் கொடுக்க உத்தரவிட்ட நிலையில் ஒன்பது கோடி கடனுக்காக 150 கோடி வீட்டை ஜப்திசெய்ததா என்று பிரபு வழக்கு தொடுத்திருந்தார். வழக்கின் விசாரணையின் பொழுது நீதிபதியின் கேள்விக்கு தனது அண்ணன் பல்வேறு இடங்களில் கடன் பெற்றிருப்பதால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்று பதில் அளித்துள்ளார்..
. நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் இவர் சக்சஸ் ,தீர்க்கதரி,சி மச்சி என மூன்று படங்களில் நடித்துள்ளதோடு மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தன் மனைவியோடு சேர்ந்து ஜகஜால கில்லாடி என்ற ஒரு படத்தை தயாரிப்பதற்காக ஈசன் ப்ரோடுக்ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி அதன் வழியாக தனபாக்கியம் என்கிற நிதி வழங்கும் நிறுவனத்திடம் இருந்து மூன்று கோடியே 74 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.. அவர்கள் தொடுத்த வழக்கின்படி உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு 9 கோடியே 39 லட்சம் கொடுக்க தீர்ப்பளித்தது., பணத்தை ராம்குமார் மகன் துஷ்யந்த் செலுத்தாததால் நீதிமன்றம் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.