
அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் இன்று தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. ஜீவகாருண்யம் தண்ட காரணியும் என்று அழைக்கப்படுகின்ற புனித பூமி இது சிவன் தாண்டேஸ்வரராகவும் பார்வதி அங்காளம்மாளாக வடிவேலுக்கு பள்ளி கொண்ட புனித பூமி. மலையின் என்கிற சிற்றரசன் ஆண்ட பகுதியாகிய இது மேல் மறையனூர் என்று அழைக்கப்படுகின்றது .
இக்கோயில் தல வரலாறு சிவனும் பார்வதியும் இந்த புண்ணிய பூமியில் உடன் உறைந்ததற்கு புராணக் கதை சொல்லுவது, முன்னொரு காலத்தில் சிவபெருமானிற்கு ஐந்து தலை இருந்தது போன்று பிரம்மாவிற்கும் 5 தலை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். சிவன் கைலைக்கு தவம் மேற்கொள்ளும் காரணமாக சென்ற பொழுது பார்வதி தேவி தனித்து இருக்கையில் பிரம்மா வர அவரை தன் தலைவன் என்று நினைத்து பார்வதி அம்மன் பாத பூஜை செய்து வழிபட நேரத்தில் கையிலையிலிருந்து சிவபெருமான் திரும்பி வர அப்பொழுதுதான் தான் பாத பூஜை செய்தது சிவனுக்கு அன்று சிவனின் தோற்றத்தைப் போல் இருக்கின்ற பிரம்மாவுக்கு என்று பார்வதி தேவி அறிந்து அதிர்கிறார். உடனே தான் பூஜை செய்யும் பொழுது ஆவது சிவபெருமான் இல்லை தான் பிரம்மா என்பதை சொல்லாமல் மறைத்ததின் காரணமாக பிரம்மாவினுடைய தலையை கொய்த்து விட வேண்டும் என்று சிவபெருமானிடம் பார்வதி வேண்ட அதன்படியே சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார் இதன் காரணமாக சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோசம் உருவாகிற்று எடுக்கப்பட்ட தலை கீழே விழாமல் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டதாகவும் அந்த நேரத்தில் சரஸ்வதி தேவையானவர் தன் கணவர் பிரம்மாவின் தலையை வெட்டி எடுத்ததை கண்டு கோபம் முற்று சிவபெருமானை சபிக்கிறார். அதனால் பிரம்மகத்தி தோசம் ஏற்பட்டு சிவபெருமான் மயானம் தோறும் அலைந்து திரிய வேண்டிய நிலை வந்தது. தன் கணவனை தலையை கொய்யச் சொன்ன பார்வதி தேவியையும் சபித்து செடி கொடிகளாக காட்டில் வாழ வேண்டும் என்றும் சபித்தாள். பிரம்மகத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்ட சிவபெருமானின் கையில் விழுகின்ற உணவுகளை கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் சாப்பிடும் நிலை உருவாயிற்று சிவபெருமான் இதன் காரணமாக உணவு உண்ண முடியாமல் பசி தாகத்தால் காடு மலை எல்லாம் சுற்றி திரிந்தார். .இந்த கொடூர நிலையை மாற்ற வேண்டும் என்று பார்வதி தேவியானவள் திருமாலிடம் சென்று இது குறித்து முறையிட அவர் சாப விமோசனத்திற்கு சிவபெருமான் உள்ள தண்டகாரணியப் பகுதியில் மயானத்திற்கு அருகில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்க சொன்னார். சிவபெருமான் தன் சூலாயுதம் கொண்டு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினார் .அந்ததீர்த்தம் தான் அக்னி தீர்த்தம் என்று இன்றும் வழங்கப்படுகிறது .தேவி ,பார்வதி உணவு வகைகளை தெரிவித்து மயானத்தில் சூறையிட்டு பெருமாளின் கையில் ஒட்டி இருந்த பிரம்மா கபாலத்தை நீக்கினார் .கவாலும் அவர் கையை விட்டு இறங்கிய பிறகு சிவபெருமான் அக்னி திருத்தத்தில் நீராடி தன் தோஷத்தை நீக்கிக் கொண்டார். சிவபெருமானின் தோஷம் நீங்கிய உடனே கபாலம் பார்வதியை பிடித்துக் கொண்டது தேவையானவள் தன் கையை பற்றி கொண்ட பிரம்ம கபாலத்தை தட்டி விட்டு காலால் உதைத்து அதனை தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார். அந்நிலையில், தேவி மிக அகோர உருவத்தோடு காட்சி தந்தார். அந்த திருவுருவம் தான் இன்றைக்கு வழிபடக்கூடிய அங்காளம்மன் பார்வதியானவள் கபால மாலை தரித்து கோபத்துடன் அங்காளம்மாளாக சாந்தமானார். இதன் காரணமாக சிவபெருமானும் பார்வதியும் சாபம் அதாவது பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்று மக்களுக்கெல்லாம் அந்த இடத்தில் எழுந்து அருளியிருந்து பல்வேறு நன்மைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்து சக்திகளும் ஆக சிறு சக்தியாக தேவி அங்காளம்மன் அங்கே காட்சி தந்து கொண்டு பக்தர்களினுடைய பாவங்களையும் போக்கி புண்ணியத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்.. மாசி மாசம் சிவராத்திரி பொழுதில் அமாவாசை காலகட்டங்களில் இந்த அங்காளம்மன் தேவிக்கு திருவிழா தொடர்ந்து தேரோட்டத்தோடு கொண்டாடப்படுகின்றது..