Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மகா சிவராத்திரி-ஆதி புருஷன் காப்பாற்றுவான் என்பது நம்பிக்கை..

by Admin

ஆன்மீகம்
 மகா சிவராத்திரி-ஆதி புருஷன் காப்பாற்றுவான் என்பது நம்பிக்கை..

மாசி மாசத்தில் வரும் மகா சிவராத்திரி சிவ வழிபாட்டில் மிக முக்கியமான தினமாகும்.. முழு முதல் கடவுள் என்று போற்றி புகழப்படும் சிவன் அனுக்கிரகம் இருந்தால் அனைத்தையும் வெல்லலாம் .எம பயத்தையும் ஒழிக்கலாம் . காலம் காலமாக புராணங்கள் வழியாக சொல்லப்பட்ட கதைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. .புலி துரத்தி ஓடிய ஒருவன் வில்வ மரத்தில் ஏறி ,தன்னை, தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள முயல.. மரத்தின் அடியில் புலி இவன் எப்பொழுது இறங்குவான் என்று அங்கேயே படுத்து கிடைக்கின்றது. .விடிய.. விடிய வில்வ மரத்தில் இருந்தவன் அயர்ந்து தூங்கி விடக்கூடாது .அப்படி தூங்கி விழுந்தால் கீழே இருக்கின்ற புலி தன்னை புசித்து விடும் என்று அவன் வில்வ இலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி  போட்டவாறு தன் தூக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள... விடியல் வருகிறது. புலியை காணவில்லை.. இவன் உயிர் பிழைத்து விடுகிறான். காரணம், அன்று சிவராத்திரி. மரத்திற்கு அடியிலிருந்த சிவலிங்கத்தை தெரிந்தோ... தெரியாமலோ, இவன் தன் உயிரை காப்பாற்றும் பொருட்டு கிள்ளி எறிந்த வில்வ இலைகள் எல்லாம் சிவனுக்கு துதிக்கப்பட்டவையாக எடுத்துக் கொண்ட சிவன் ...அவன் உயிரை காப்பாற்றுகிறார்..  சிவன் அடியை ,எவன் ஒருவன் தெரிந்தோ, தெரியாமலோ சரணடைகிறானோ... அவனை, அந்த ஆதி புருஷன் காப்பாற்றுவான் என்பது காலம் காலமாக பின்பற்றப்படும்.,நம்பிக்கை.

Share via