
நடிகர்களில் அஜித்குமார் ஒரு வித்தியாசமானவர். நடிப்பை தாண்டி அவர் வேறு சில துறைகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்து அதில் வெற்றியை பதித்து வருகிறார். அதில் ஒன்றுதான் கார் ரேஸ் ,பைக் ரேஸ்.
சமீபத்தில் ,துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அவருடைய கார் தடுப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. காயங்களின்றி தப்பினார். இப்பொழுது ஸ்பெயினில் நடக்கும் கார் பந்தயத்தில் அவர் காரை முந்திச் செல்ல முயன்ற ஒரு கார் முட்டி இரண்டு முறை உருண்ட எழுந்தது . காயங்களின்றி அஜித்குமார் பத்திரமாக வெளியே வந்தார். இது கார் பந்தயத்தில் வழக்கமாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தாலும் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் அஜித் குமார் பற்றிய செய்திகள் உடனுக்குடன் வந்து காற்றில் சூடு பிடிக்கச் செய்கின்றது.