
தமிழ் ,மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த நடிகை பார்வதி தெலுங்கானாவைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்ரித் அசோக்கை திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் வெளிவந்த விஜயின் கோட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் நேற்றிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தன் கணவருடன் இருக்கின்ற புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார்.