
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் பிளஸ் 2 முடிந்த மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் செப்டம்பர் 15,16,23,24-ல் நடக்க உள்ளன. சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இத்தேர்வை எழுத தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஆன்லைன் வழியாக செப்டம்பர் 2ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
தேர்வுகள் இணைய வழியாக நடத்தப்பெறும். விபரங்கள் அறிய https://cucet.nta.nic.in/என்ற இணையத்தளத்தில் காணலாம்.
மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் திருவாரூரிலும் புதுச்சேரியில் காலப்பட்டிலும் இயங்கி வருகிறது.