
அஜித் குமார் ,திரிஷா, ரெஜினா, அர்ஜுன் ,ஆரவ் ,நெகிராநாயர் உள்ளிட்டோா் நடித்து அனிருத் இசையமைப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ,தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ள திரைப்படம் விடா முயற்சி. அஜர் பைசான் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, எடிட்டிங் ,டப்பிங் என அனைத்து பணிகளும் முடிந்து பொங்கலுக்குவெளிவர உள்ள திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்தது .அதனை தொடர்ந்து, இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அதனை தொடர்ந்து பாடல் காட்சி வீடியோ வெளியானது.