
'விடுதலை 2' சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சேத்தன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த 'விடுதலை 2' திரைப்படம் இன்று (டிச.20) திரைக்கு வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடுதலை 2 இன்று வெளியாகிறது. விடுதலை 2 சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இன்று (டிசம்பர் 20) ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.