Advertiment

என்னை மையமாக வைத்து சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்-இளையராஜா விளக்கம்

by Admin

சினிமா
என்னை மையமாக வைத்து சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்-இளையராஜா விளக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் என்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்ட பொழுதுஆண்டாள்  ரெங்மன்னாரை தரிசனம் செய்வதற்காக அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற பொழுது அவரை அங்கிருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் தடுத்து நிறுத்தி வெளியே நிற்குமாறு கூறியதாகவும்அது குறித்து பெரும் விவாதம் உள்ளான நிலையில், இதற்கான விளக்கத்தை கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாகவும். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என்றும் அர்த்தம் மண்டபத்திற்குள் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும்செய்திகள் வெளியானநிலையில் இது குறித்து இளையராஜா எக்ஸ்  பக்கத்தில், என்னை மையமாக வைத்து சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். எந்த நேரத்திலும் இடத்திலும் எனது சுயமரியாதையை நான் சமரசம் செய்ததில்லை விளக்கம் அளித்துள்ளார்.

 

Share via