Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் - கிருஷ்ணா பரமாத்மா கீதா உபதேசம் செய்த பொழுது...

by Admin

ஆன்மீகம்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் - கிருஷ்ணா பரமாத்மா கீதா உபதேசம் செய்த பொழுது...

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா மகாபாரத யுத்த களத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்த பொழுது தமக்கு உகந்த மாதம் மார்கழி என்பதை வெளிப்படுத்தி இருப்பார்..

குளிர் ஊசி போன்று தேகத்தை குத்தி நடுநடுங்க செய்யும் காலம் மார்கழி. இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து திருமணம் ஆகாத பெண்கள் நீராடி, நெய் விளக்கு ஏற்றி கிருஷ்ணனை வழிபட்டால் அவர்களுக்கு திருமணம் ஏற்படும் என்பதை ஆண்டாள் தம் திருப்பாவையில் வாரணம் ஆயிரம் வர..,, கனா கண்டேன், தோழி. கனா கண்டேன் என்று பெருமாளை தன் கணவனாக கைப்பற்றி திரு வீதியில் ஆயிரக்கணக்கான பெண்களோடு  யானைகள் புடை சூழ வருகை புரிந்ததாக ... அந்தப் பாடலில் தம் உணர்வை வெளிப்படுத்தி இருப்பார். அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் இட்டு, சாணி உருண்டையில் பூசணி பூவை செருகி வைத்து பெருமாளின் திருநாமங்களை போற்றி பாடி வருகிறவர்களின் வார்த்தைகளை தம் செவிகளில் வாங்கி.... அதிகாலையில் பூஜை செய்தால் நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்று காலம் காலமாக இறை வழிபாட்டை பின்பற்றி வருகின்ற மக்கள்.... மார்கழியை சிறப்புக்குரிய நாளாகவே கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். வருகின்றனர்.

Share via