Advertiment

பள்ளிகள் திறப்பு : நிபந்தனைகள் என்ன ? தமிழக அரசு அறிவிப்பு

by Editor

கல்வி
பள்ளிகள் திறப்பு : நிபந்தனைகள் என்ன ? தமிழக அரசு அறிவிப்பு



தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் முதல் நாளில் 50 சதவீதம் மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 100% கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களுக்கு சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share via

More Stories