
நடிகர் அல்லு அர்ஜுன் இன்று ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார் .புஷ்பா-2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்தியா திரையரங்குக்கு முன்பு அல்லு அர்ஜுனாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கில் முற்றுகையிட்டனர். இதில் கூட்டத்தில் சிக்கி ரேவதி என்கிறபெண் பலியானதோடு அவருடைய மகன் காயங்களோடு மருத்துவமனையில் உள்ளார் .இந்நிலையில் திரையரங்கில் முன் அனுமதி இல்லாமல் படம் பார்க்க அல்லு அர்ஜுனா அவருடைய மனைவிசினேகா, ரஷ்மிகா மந்தனா ,இசையமைப்பாளர் தேவி பிரசாத் உள்ளிட்டோர் வருகை புரிந்து இருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பலர் காயமற்றதோடு அல்லு அர்ஜுன் தனியார் மெய்க்காவலர்கள் ரசிகர்களைப் பிடித்து தள்ளியதில் பலர் காயமுற்றதாகவும் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அல்லு அர்ஜுனா கைது செய்யப் பட்டதோடு திரையரங்க உரிமையாளரும்கைது செய்யப்பட்டார்.
: