Advertiment

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது.

by Admin

சினிமா
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது.

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது. தொழிலதிபராக உள்ளஅவருடைய காதல் கணவர் ஆண்டனி தட்டில் கழுத்தில் தாலி கட்டினார் .கீர்த்தி சுரேஷ் 2014- ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் எனும் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்து புகழ்பெற்றார் .ரெமோ, சீம ராஜா படங்களிலும் கதாநாயகியாக நடித்ததோடு தனுசுஜோடியாக தொடரி படத்திலும் விஷால் ஜோடியாக சண்டக்கோழி படத்திலும் விஜய்யுடன் பைரவா, சர்க்கார், ரஜினியுடன் அண்ணாத்தே, உதயநிதி ஸ்டாலினோடு மாமன்னன் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர்இவருடைய தாயாா் நடிகை மேனகா,அப்பா இயக்குனர் சுரேஷ்..

 

Share via