Advertiment

நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று

by Editor

சினிமா
நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவிய கொரோனா முதல் அலையின்போதும், இந்த ஆண்டில் பரவிய கொரோனா இரண்டாவது அலையின்போதும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், திரைத்துறையினர் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்பட்டுத்த பல மாநிலங்களிலில் ஊரடங்கு அமல்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தாலும் தினமும் தமிழகத்தில் மட்டுமே கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தினமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில், நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஹாய் ஃப்ரண்ட்ஸ். எனக்கு எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. கடந்த நான்கைந்து நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்' என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

Share via