Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தேசிய அளவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுஅறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி முதலிடம்.

by Editor

கல்வி
தேசிய அளவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுஅறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி முதலிடம்.

தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்க போட்டியை மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையத்தில் நடத்தியது.

இந்த போட்டியில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் தமிழகத்தில் இருந்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இலஞ்சி பாரத்மாண்டிசேரி மெட்ரிக் பள்ளி மாணவியான ரச்னா என்ற மாணவி கலந்து கொண்டார்.

இந்த நிலையில், ரச்னா என்ற மாணவி தேசிய அளவில் நடைபெற்ற இந்த கருத்தரங்க போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழகத்திற்கும், தென்காசி மாவட்டத்திற்கும் தற்போது பெருமை சேர்த்துள்ள நிலையில், மாணவி ரச்னாவிற்கு, அவர் பயின்று வரும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறிப்பாக, மும்பையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு விமானத்தின் மூலம் வந்த மாணவி ரச்னா அங்கிருந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில், அவரை தமிழக-கேரளா எல்லைப் பகுதியான புளியரையில் வைத்து, பேண்ட் வாத்தியங்கள் முழங்க சக மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகி மோகனகிருஷ்ணன்,காந்திமதி மோகனகிருஷ்ணன்  உள்ளிட்டோரும் உற்சாக வரவேற்பு அளித்து அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories